கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு ஸலாமாவின் வாழ்த்துச் செய்தி

November 18, 2019
1,183 Views

திரு. கோட்டாபய ராஜபக்ஷ,
மாண்புமிகு ஜனாதிபதி,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு.

18 நவம்பர், 2019

கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு ஸலாமாவின் வாழ்த்துச் செய்தி

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு எமது இனிய வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கையின் அரச கலாசாரத்தில் ஜனநாயக ரீதியான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு தங்களுக்கு ஒரு புதிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக இன, மத வேறுபாடுகள் இன்றி நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவல் காணப்படுகிறது.

இனங்களுக்கு இடையே உறவில் ஏற்பட்டுள்ள உடைவுகளின் பாதிப்பை சீர்செய்யவும், நம் எதிர்கால சந்ததியினர் அனைவரும் ஒருங்கிணைந்து வாழ முடியுமான, வளமான தாயகத்தை கட்டியெழுப்பவும் அயராது உழைப்பீர்கள் என்ற அசையாத நம்பிக்கை எமக்கு உண்டு. அந்தவகையில் சாதகமான நிலைபேறான மாற்றம் நாட்டில் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஒன்றிணைந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆணையும் உங்களுக்குக் கிடைத்துள்ளது.

மேற்படி ஜனநாயக சீர்திருத்தங்களை ஏற்படுத்தி அனைவரும் ஒருங்கிணைந்து வாழ முடியுமான, வளமான தாயகத்தை கட்டியெழுப்பும் பணியில் ஸலாமா எப்போதும் கைகொடுக்கும். உங்களுக்கும், இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கும் மீண்டும் எமது வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
தாயக பூமிக்கு என்றும் நலவை நாடும்

ஆஸாத் அப்துல் முஈத்
தலைவர் – ஸலாமா

பிரதி : ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

Leave A Comment