கற்றல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது எவ்வாறு? மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி

September 18, 2020
1,533 Views
‘கற்றல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது எவ்வாறு?’ என்ற தலைப்பிலான மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று இன்று (18-09-2020) காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை கொழும்பு 12 இல் அமைந்துள்ள அல்-ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் ஜனாப் எம்.எம். மஹ்ஸூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வளவாளராக உளவளத்துணை ஆலோசகர் மனூஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடாத்தினார்.
ஸலாமா சொஸைட்டியின் அணுசரனையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதன் பொதுச் செயலாளர் எம்.எப்.எம். பாஹிம் அவர்கள் கலந்து கொண்டதோடு, இதில் தரம் 10, 11 இல் கல்வி கற்கும் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
  
            

Leave A Comment