பாவங்களை அழிக்கும் ஆஷூரா நோன்பு

August 27, 2020
1,590 Views
  • ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்

மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழிகாட்டும் இஸ்லாம் நடுநிலையான, சமநிலையான போதனைகளை எமக்குத் தந்துள்ளது. எல்லா நிலமைகளிலும் எம்மைப் படைத்த அல்லாஹ்வுடன் அழகிய தொடர்பைப் பேணி வாழுமாறு எம்மை இஸ்லாம் தூண்டுகின்றது. இதற்கான வழிகாட்டல்களில் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய கடமைகளையும், உபரியாக செய்ய வேண்டிய வணக்கங்களையும் விரிவாக நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள்.

இந்த வரிசையில் நோன்பு முக்கியமான ஒரு இபாதத்தாகும். கடமையாக ரமழான் மாதத்து நோன்புடன் இன்னும் வருடத்தில் நோற்க வேண்டிய சுன்னத்தான நோன்புகளையும் ஹதீஸ்கள் விளக்கியுள்ளது.

இந்த வரிசையில் நோன்பு முக்கியமான ஒரு இபாதத்தாகும். கடமையாக ரமழான் மாதத்து நோன்புடன் இன்னும் வருடத்தில் நோற்க வேண்டிய சுன்னத்தான நோன்புகளையும் ஹதீஸ்கள் விளக்கியுள்ளது. மனிதனின் உளக்கிடக்கைகளை தூய்மைப்படுத்தி, அல்லாஹ்வுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தும் நோன்பானது பாவக்கரைகள் அதிகரித்துள்ள இக்காலத்தில் எவ்வளவு அவசியமானது.

இவ்வகையில் முஹர்ரம் மாத நோன்பு ரமழானுக்கு அடுத்து சிறந்த நோன்பென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்). முஹர்ரம் மாதத்தின் பிறை ஒன்பது, பத்து ஆகிய தினங்களின் நோற்கும் நோன்பு குறிப்பிடத்தக்கது. இதனை தாஸூஆ, ஆஷூரா என அழைப்போம்.

நபி (ஸல்) அவர்கள் இந்த நாட்களில் நோன்பு நோற்குமாறு எம்மை வேண்டியுள்ளார்கள். இது பற்றி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்றிருந்ததைக் கண்டார்கள். நீங்கள் ஏன் நோன்பு நோற்கிறீர்கள்? என அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இது ஒரு மகத்தான நாளாகும். நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களுடைய சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனது பட்டாளத்தையும் அழித்த நாளாகும். அதற்காக நபி மூஸா (அலை) நோன்பு நோற்றார்கள், எனவே நாங்களும் நோற்கிறோம் எனக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: அப்படியெனில் மூஸா (அலை) அவர்களுக்கு உங்களை விட நாம் அதிகம் அருகதையுடையவர்கள் எனக் கூறி விட்டு தானும் நோன்பிருந்ததுடன் தனது தோழர்களையும் நோன்பிருக்குமாறு ஏவினார்கள்’. (புஹாரி, முஸ்லிம்)

ஆஷுரா நோன்பின் சிறப்பு பற்றி அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்: ” நபி (ஸல்) அவர்களிடம் ஆஷுரா நோன்பு பற்றிக் கேற்கப்பட்டது, அது கடந்த வருடத்தில் இடம்பெற்ற (சிறு) பாவங்களுக்கு குற்றப்பரிகாரமாக அமையும் என குறிப்பிட்டார்கள்”. (முஸ்லிம்)

முஹர்ரம் ஒன்பதாவது நாளான தாஸூஆ தினத்தில் நோன்பு நோற்பது பற்றி பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்’. (முஸ்லிம்). ஆனால் அடுத்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் வபாதாகி விட்டார்கள்.

ஆஷுரா நோன்பை நோற்பதற்கான ஒழங்குகள்

தாஸூஆ, ஆஷூரா நோன்பு தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை வைத்து இமாம்கள் இந்த நாட்களில் நோன்பு நோற்பதன் ஒழுங்குகளை விளக்கியுள்ளார்கள்.

  1. பிறை 9,10,11 ஆகிய மூன்று தினங்களிலும் நோன்பு நோற்றல்
  2. தாஸூஆ, ஆஷூரா எனப்படும் பிறை ஒன்பது, பத்து ஆகிய தினங்களில் நோன்பு நோற்றல்
  3. பிறை பத்தில் (ஆஷூரா தினம்) நோன்பு நோற்றல்.

Leave A Comment