ஸலாமா வாராந்த நினைவூட்டல் 08

June 4, 2026
5 Views

முஹம்மது (ஸல்) அவர்கள் தான் வரலாற்றிலேயே மிகச் சிறந்த மனிதர்

மைகேல் ஹார்ட் ஏன் நபி முஹம்மது ﷺ அவர்களை வரலாற்றிலேயே மிகச் சிறந்த மனிதராகக் கூறினார்? மைக்கல் ஹார்ட் அவர்கள் 28 ஆண்டுகள் எடுத்து (The 100: A Ranking of the Most Influential Persons in History) என்ற நூலை எழுதினார். அதை முடித்த பிறகு, லண்டனில் நடந்த ஒரு சொற்பொழிவில் வரலாற்றிலேயே மிகச் சிறந்த மனிதர் யார் என்பதை அறிவிக்க முயன்றபோது, மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து அவரை நிறுத்த முயன்றனர்.
அவர் கூறினார்: “ஒரு மனிதர் அன்றைய சிறிய கிராமமான மக்காவில் நின்று ‘நான் உங்களுக்கான அல்லாஹ்வின் தூதர்; உங்களின் நல்லொழுக்கங்களை முழுமைப்படுத்த வந்துள்ளேன்’ என்று சொன்னார். ஆரம்பத்தில் அவரை நம்பியவர்கள் நால்வர் மட்டுமே – அவருடைய மனைவி, நண்பர், மற்றும் இரண்டு சிறுவர்கள்!

இன்று 1400 ஆண்டுகள் கடந்த பிறகு முஸ்லிம்களின் எண்ணிக்கை 1.5 பில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும் தினமும் அதிகரித்து வருகிறது. ஒரு பொய் 1400 ஆண்டுகள் நிலைத்து நிற்க முடியாது. மேலும் 1.5 பில்லியன் மக்களை ஒருவரால் ஏமாற்ற முடியாது. மேலும் இவ்வளவு காலம் கடந்தபோதிலும், தங்களுடைய நபியைப் பற்றிய ஒரு வார்த்தைக்காக தங்களையே அர்ப்பணிக்கத் தயார் நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் உள்ளனர்.
எனவே, நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தான் வரலாற்றிலேயே மிகச் சிறந்த மனிதர் ஆவார்.”

பெற்றோருக்கு பிள்ளைகள் கேட்கும் பிரார்த்தனை

ஒரு முஸ்லிமினுடைய இறுதி இலக்கு சுவனத்தை சென்றடைவதாகும்;. அந்த சுவனம் நாம் வாழும் பிரபஞ்சத்தை விடவும் அகண்டு விரிந்ததாகும். அதே போன்று அந்த சுவனத்திலே பல அந்தஸ்துக்கள் இருக்கின்றன. எந்த அளவுக்கெனில் நரகத்தில் உள்ள ஒருவர் எவ்வாறு சுவர்க்க வாசிகளைப் பார்த்து கவலைப்படுவாரோ அதனை விடவும் சுவனத்தில் தாழ்ந்த அந்தஸ்தில் இருக்கின்ற ஒருவர் அதற்கு மேலால் உள்ள அந்தஸ்தில் உள்ளவரைப் பார்த்து கவலைப்படுவாராம்.
பெற்றோர்களைப் பொறுத்துவரையில் சுவனத்தில் அவர்களுடைய அந்தஸ்துக்கள் உயர்த்தப்படும். “நிச்சயமாக அல்லாஹ் ஒரு நல்லடியாரின் அந்தஸ்தை சுவனத்தில் உயர்த்துவான். அப்போது அவர், ‘என் இறைவா! இது எனக்கு எப்படி கிடைத்தது?’ என்று கேட்பார். அதற்கு அல்லாஹ், ‘உனது பிள்ளை உனக்காகப் பாவமன்னிப்பு (இஸ்திஃபார்) தேடியதால் தான்’ என்று கூறுவான்.” (முஸ்னத் அஹ்மத், இப்னு மாஜா)

ஏன் இந்த கர்வம்?

மனிதன் இறுதியாகச் செல்லும் வாகனம் ஸன்தூக், அணியும் ஆடை கபன், வசிக்கும் வீடு கப்ரு. இது தான் ஒவ்வொரு மனிதனின் இறுதி நிலை. இப்படியிருக்க அவன் ஏன் கர்வம் கொள்ள வேண்டும்?
எனவே மனிதனே, பணிவுடன் வாழப் பழகு.

Leave A Comment