“இயற்கையை நேசிப்போம் உயிர்களைக் காப்போம்” – தேசிய ஸலாமா தின நிகழ்வு

February 26, 2018
2,789 Views

2018ம் ஆண்டுக்கான ஸலாமா வார நிகழ்வுகள் “இயற்கையை நேசிப்போம் உயிர்களைக் காப்போம்” என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், தேசிய ஸலாமா தின நிகழ்வு 25-02-2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கேகாலை மாவட்ட அரச அதிபர் L.J.M.G. Chandrasiri Bandara அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ‘உலகத்தில் தோன்றிய எல்லா மதங்களும், மார்க்கங்களும் சூழலைப் பாதுகாக்குமாறே உபதேசித்துள்ளது. உலகத்தில் நீர் வளம் குறைவடைந்து கொண்டு வருகிறது. இன்னும் 20 வருடங்களில் ஆசியக் கண்டப் பிரதேசத்தில் நெல் உற்பத்தி கூட செய்ய முடியாத ஒரு நிலை ஏற்படும் என சூழலியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஸலாமா நிறுவனம் ‘இயற்கையை நேசிப்போம் உயிர்களைக் காப்போம்” என்ற தொனிப்பொருளில் ஸலாமா தினத்தை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும்” எனக் குறிப்பிட்டார்.

கௌரவ அதிதிகளாக ஸலாமா தலைவர் ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத், Mawanella Divisional Secretary M.M.P. Priyangani Pethangoda, Aranayake Divisional Secretary Z.A.M. Faizal,  ஹெம்மாதகம மஸ்ஜித் சம்மேளன தலைவர் M.H.M. Yoosuf ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்புச் பேச்சாளராக இலங்கை சூழலிய சங்கத்தின் தலைவர் திரு. வஜிர சிரிமான்ன அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ‘ஸலாமா மரம் நடும் திட்டத்தை முன்னெடுத்திருப்பது சிறந்ததொரு விடயமாகும். ஏனெனில், மரங்கள் சூழலுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.   மரங்களை நடுவதைப் போலவே அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்நிகழ்வில் ஹெம்மாதகம பிரதேச பிரமுகர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதில் ஹெம்மாதகம கிராமத்தில் 700 மரக் கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் மர நடுகையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்துடன் ஸலாமாவின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றது.

Leave A Comment