இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் ஸலாமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்பு

February 5, 2020
1,109 Views

04-02-2020ம் திகதி நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற்ற இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் ஸலாமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்விலும், சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற அரச சுதந்திர தின நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

அத்தோடு, ஸலாமாவின் பொதுச் செயலாளர் எம்.எப்.எம். பாஹிம் அவர்களும் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ஷெய்க் எம்.எப். முஹம்மத் அவர்களும், கொழும்பு வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுல் நஜ்மி ஜும்ஆ பள்ளிவாசல் பைதுல் மால் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் அல்-ஹிக்மா கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்விலும், கொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குப்பியாவத்த மஸ்ஜித் முற்றவெளியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

ஸலாமாவின் உப தலைவர் எஸ். நிஹாஸ் ஆசிரியர் அவர்கள், கிண்ணியா பூவரசன்தீவு அல்-மினா மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் விஷேட விருந்தினராக கலந்து கொண்டு, சுதந்திர தின விஷேட உரையையும் நிகழ்த்தினார்.

இன்னும் பல சுதந்திர தின நிகழ்வுகளில் ஏனைய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஸலாமாவின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

          

Leave A Comment