வருடாந்தம் நடைபெறுகின்ற ஸலாமா தின நிகழ்வுகள் இவ்வருடமும் ஸலாமா வார நிகழ்வுகளாக ‘சூழலைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுகள் இன்ஷா அல்லாஹ் பெப்ரவரி 24ம் திகதி முதல் மார்ச் 04ம் திகதி வரை நாட்டின் பல பிரதேசங்களிலும் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில் இவ்வருட தேசிய ஸலாமா தின நிகழ்வு ஹெம்மாதகம ISDA நிறுவனத்துடன் இணைந்து ஹெம்மாதகம வில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 25ம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பிக்கவிருக்கும் இந்நிகழ்வு ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
‘சூழலைப் பாதுகாப்போம்” என்ற தொனிப் பொருளின் முக்கிய அம்சங்களாக பின்வருவன உள்ளடக்கப்பட்டுள்ளன :
1. மரம் நடுவோம்
2. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்
3. பொலிதீன், பிளாஸ்திக் பாவனையைக் குறைப்போம்
4. டெங்கு நோயிலிருந்து பாதுகாப்போம்.
5. வாராந்த, மாதாந்த சிரமதானங்கள் செய்வோம்.
6. கழிவுப் பொருட்களை வகைப்படுத்துவோம்.





