கிறிஸ்தவ தேவாலயங்கள் கிறிஸ்தவ மக்களை நோக்கி அமைதியையும் நிதானத்தையும் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

April 22, 2019
1,216 Views

– மதிப்புக்குரிய அருட்தந்தை ஜோய் தெரிவிப்பு

கடந்த 21-04-2019ம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நோக்கில் ஸலாமாவின் தலைமை 22-04-2019ம் திகதி கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை புனித சென் செபஸ்தியன் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு விஜயம் செய்தனர்.

அத்தேவாலயத்தின் அருட்தந்தை மதிப்புக்குரிய ஜோய் அவர்களையும் அதன் நிர்வாக சபை அங்கத்தவர்களையும் சந்தித்து நடந்த நிகழ்வுகளுக்கான எமது ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்தோம். நாட்டின் அமைதியையூம் ஒற்றுமையையும் பேணுவதில் நாம் இணைந்து செயற்படுவதன் அவசியத்தை இரு தரப்பும் ஞாபகப்படுத்திக் கொண்டது.

இத்துயர சம்பவத்தைத் தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் கிறிஸ்தவ மக்களை நோக்கி அமைதியையும் நிதானத்தையும் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்திக் கொண்டிருப்பதாக மதிப்புக்குரிய அருட்தந்தை ஜோய் குறிப்பிட்டமை பாராட்டுக்குரியது.

Leave A Comment