2019ம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய ஸலாமா சொஸைட்டி அங்கத்தவர்களின் பிள்ளைகள் மற்றும் ஸலாமாவுடன் இணைந்து பணி புரியும் CBO அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான வதிவிட பயிற்சி முகாம் ‘Salamah’s Successor’ எனும் தொனிப் பொருளில் ஸலாமா சொஸைட்டியினால் ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களுக்கான வதிவிட பயிற்சி முகாம் கடந்த 13-15/01/2020ம் திகதிகளில் ஸலாமா நிறுவன கேட்போர் கூடத்தில் ஆரம்பிக்கப்பட்டு, கம்பளை மற்றும் நுவரெலியாவுக்கான சுற்றுலாவாகவும் நடைபெற்றது.
அத்தோடு, மாணவிகளுக்கான வதிவிட பயிற்சி முகாம் 10-12/01/2020ம் திகதிகளில் கம்பளையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில், நாளாந்த சமூக ஒழுங்கு முறை (Daily etiquettes), ஐவேளைத் தொழுகைகளை சரியாக நிறைவேற்றல், உயர்கல்வி வழிகாட்டல் (Career Guidance), தனிநபர் அபிவிருத்தி (Personal Development), சமூக வளைத்தலங்களை எவ்வாறு பயன்படுத்துவது (How to use Social Media), இளைஞர்களைப் பாதுகாத்தல் (Youth Protection Program), பல்லின கலாசார சூழலில் சகவாழ்வு (Co-existence in Multi-Cultural Environment), நடத்தைகளை எவ்வாறு மாற்றிக் கொள்வது (How to change behaviours) என்ற தலைப்புக்களில் துறைசார்ந்தவர்களால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டது.










