அனுதாபச் செய்தி

January 22, 2020
1,131 Views

அமைதியான, ஆரவாரமற்ற சமூக சேவையாளராகவும், ஆசிரியராகவும், அதிபராகவும் பணி புரிந்த நாடறிந்த அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் மறைவையிட்டு, ஸலாமா சொஸைட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

அல்லாஹ்தஆலா இவரின் சேவைகளை ஏற்றுக் கொண்டு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வானாக எனப் பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மறைவைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வருகின்ற கருத்துக்கள், அனுதாபங்களைப் பார்க்கின்ற போது, அவர் எந்தளவுக்கு சமூகத்தோடு இணைந்து பணியாற்றியிருக்கின்றார் என்பதையும் பலருடைய ஆளுமை விருத்தியில் தனிப்பட்ட ரீதியில் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றார் என்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அன்னாரின் இழப்பில் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ்தஆலா பொறுமையையும், சிறந்த வாழ்வையும் வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்.

ஸலாமா சொஸைட்டி
22-01-2020.

Leave A Comment