ஷரீஆ துறை மௌலவி மற்றும் விடுகை வருட மாணவர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு

April 10, 2018
1,250 Views

நவீன காலத்திற்கு மிகவும் அவசியமான ‘தேசம் குறித்த ஷரீஆவின் உயர் இலக்குகள்’ எனும் கருப்பொருளில் ஷரீஆ துறை பட்டதாரிகள் மற்றும் குருநாகல் மாவட்ட அறபுக் கல்லூரிகளின் விடுகை வருட மாணவர்களை இலக்காகக் கொண்டு கடந்த 01 ஏப்ரல் 2018 ல் அந்நூர் அறபுக் கல்லூரியின் கேட்போர்கூடத்தில் செயலமர்வொன்று நடைபெற்றது. ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் (நளீமி) அவர்கள் ஆரம்பவுரையை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் ‘நாட்டுப் பற்றுக்கு நபிகளார் ஒரு முன்மாதிரி’ என்ற தலைப்பில் மர்கஸுஸ் ஸலாமாவின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன் (நளீமி) அவர்களும், ‘எதிர்கால வாழ்க்கையை எவ்வாறு வடிவமைப்பது’ என்ற தலைப்பில் உளவள ஆலோசகர் மனூஸ் அபூபக்கர் அவர்களும், ‘மகாஸிதுல் வதனிய்யா’ என்ற தலைப்பில் ஸலாமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் (நளீமி) அவர்களும் உரையாற்றினர்.

மர்கஸுஸ் ஸலாமாவுடன் அந்நூர் அறபுக் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த செயலமர்வில் சுமார் 130 பேர் அளவில் கலந்து கொண்டனர். கல்லூரியின் அதிபர் மௌலவி S.D. முனவ்வர் (தீனி, பின்னூரி) அவர்களின் வழிகாட்டலும் மேற்பார்வையும் இந்த நிகழ்வின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும். செயலமர்வின் முடிவில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Leave A Comment