திகன, அகுரனை, என்டேரதன்னை பிரதேசங்களுக்கான விஜயம்

March 26, 2018
1,282 Views

அண்மைய இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட திகன, அகுரனை, என்டேரதன்னை பிரதேசங்களுக்கு ஜமாஅதுஸ் ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்களின் தலைமையிலான ஒரு குழு கடந்த 10,11/03/2018 ம் திகதிகளில் விஜயம் செய்தார்கள்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் பாதிப்புக்களையும் கண்டறிவதும், பாதிப்புக்குற்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறுவதும், அவர்களது தேவைகளை இனங்கண்டு கொள்வதும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி பக்க பலமாக இருப்பதும் விஜயத்தின் நோக்கங்களாக காணப்பட்டது.

திகன பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட பொது தலைமைத்துவத்தை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிய பயன்மிகு கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Comment