முன்னாள் சட்ட மா அதிபர் சிப்லி அஸீஸ் அவர்களின் வபாத்தை முன்னிட்டு ஜமாஅதுஸ் ஸலாமா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது

October 8, 2018
1,171 Views

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன். முன்னாள் சட்ட மா அதிபரும், சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவரும், அரசியல் யாப்பு சீர்திருத்த சபை உறுப்பினரும், மத்திய அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத் தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி அல்ஹாஜ் சிப்லி அஸீஸ் அவர்களின் வபாத்தை முன்னிட்டு ஜமாஅதுஸ் ஸலாமா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மர்ஹூம் சிப்லி அஸீஸ் அவர்களின் நாட்டுக்கும், சமூகத்துக்குமான பங்களிப்புக்களை நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்.

அன்னாரின் பணிகளை வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. அவரது பாவங்களை மன்னித்து உயர்தரமான சுவனத்தை வழங்குவானாக.

அத்துடன் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்கள், உறவினர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் பொறுமையையும் மன ஆறுதலையும் வழங்குவானாக.

عظم الله أجركم وأحسن عزاءكم وغفر لميتكم

அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்
தலைவர்
ஜமாஅதுஸ் ஸலாமா.

Leave A Comment