புத்தளம் பிராந்திய மத்ரஸா மாணவர்களுக்கான “மகாஸித் அல் வதனிய்யா” செயலமர்வு

October 12, 2018
1,182 Views

‘மகாஸித் அல் வதனிய்யா” எனும் கருப்பொருளில் புத்தளம் பிராந்திய மத்ரஸாக்களின் விடுகை வருட மாணவர்களுக்கான ஒரு நாள் செயலமர்வொன்று 11/10/2018ம் திகதி புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் (நளீமி) அவர்கள் ‘மகாஸித் பற்றிய அறிமுகம்” என்ற தலைப்பில் ஆரம்பவுரையை நிகழ்த்தினார்.

இதில் ‘தேசம், நாடு பற்றிய கருத்தியல்” என்ற தலைப்பில் சர்வதேசப் பார்வை சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் (நளீமி) அவர்களும், ‘மகாஸிதுல் வதனிய்யா” என்ற தலைப்பில் மர்கஸுஸ் ஸலாமாவின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன் (நளீமி) அவர்களும், ‘சமூக வலைத்தளங்களும் தஃவாவும்” என்ற தலைப்பில் SLBC தயாரிப்பாளர் அஷ்ஷெய்க் இஸ்பஹான் ஷரப்தீன் (நளீமி) அவர்களும் உரையாற்றினர்.

மர்கஸுஸ் ஸலாமாவுடன் புத்தளம் காஸிமிய்யா அறபுக் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த செயலமர்வில் 7 மத்ரஸாக்களிலிருந்து 60 பேர் அளவில் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந்த செயலமர்வை ஒழுங்குபடுத்தித் தந்த காஸிமிய்யா அரபுக் கல்லூரி அதிபர் மதிப்பிற்குரிய உஸ்தாத் அப்துல்லாஹ் மஃமூத் ஆலிம் அவர்கள் நினைவு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். செயலமர்வின் முடிவில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

        

Leave A Comment