ஸலாமா வாராந்த நினைவூட்டல் 26

October 9, 2026
25 Views

நபிமார்கள் மனிதர்களில் சிறந்தவர்கள்

நபிமார்கள் மனிதர்களில் சிறந்தவர்கள்;. இவர்கள் அல்லாஹ்வின் தூதர்கள். மனித சமூகத்திற்கு வழிகாட்டிகளாக அனுப்பப்பட்டவர்கள். நபித்துவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அதற்குத் தகுதியான சிறப்புகளுடன் தெரிவு செய்யப்படுகின்றனர். அவர்களின் இதயங்கள் தூய்மையானவை. அவர்களின் அறிவும் முதிர்ச்சியும் தௌிவானவை. உண்மைகளைப் புரிந்துகொள்வதில் குழப்பமடையாதவை. இவர்களை அல்லாஹ்வே தெரிவு செய்கின்றான்.
அவர்களின் உடல்கள் தீய நோய்கள் மற்றும் வெறுக்கத்தக்க குறைபாடுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவையாகும். மேலும் மக்களுடனான அவர்களின் உறவு நன்மை தர்மம் மற்றும் அன்பை அடிப்படையாகக் கொண்டதாகும்.
அல்லாஹ் நபிமார்களை சிறந்த பண்புகள் நேர்மை தூய்மை மற்றும் உயர்ந்த ஒழுக்கங்களை வழங்கிச் சிறப்பித்தான். இதனால் அவர்கள் மக்களுக்கு சிறந்த முன்மாதிரிகளாகவும் வழிகாட்டிகளாகவும் திகழ்ந்தனர். அவர்களுக்குப் பின்னர் வரும் அழைப்பாளர்களுக்கு அவர்கள் சிறந்த முன்மாதிரியாக திகழ்கின்றார்கள்.
25 நபிமார்கள் பற்றிய செய்திகளை அல்குர்ஆன் கூறுகின்றது. பெயர் குறிப்பிடப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத அனைத்து நபிமார்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் தலைவராகத் திகழ்கின்றார்கள். அனைத்து நபிமார்களையும் ஈமான் கொள்வது ஒரு முஸ்லிமின் கடமையாகும் என இஸ்லாம் கூறுகின்றது.

ஸலவாத்தின் சிறப்பு

இலகுவான ஓர் அமல். ‘யார் காலையிலும் மாலையிலும் என்மீது பத்துத் தடவைகள் ஸலவாத் கூறுகின்றாரோ மறுமை நாளில் எனது ஷபாஅத் அவருக்குக் கிடைக்கும்” என்ற நபி (ஸல்) அவர்களது நன்மாராயத்தை அபூ தர்தா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (தபரானி)
ஒரு முஸ்லிம் மறுமை வாழ்வை எதிர்ப்பார்த்து கடமைகளை நிறைவேற்றி பாவங்களை விட்டும் விலகி வாழ்வதுடன் இத்தகைய அமல்களையம் செய்யம் போது நபியவர்களின் சிபாரிசை மறுமையில் பெற்றுக் கொள்வதற்கான பாக்கியத்தை அடைந்து கொள்ள முடியும். எனவே நபி (ஸல்) அவர்கள் மீது காலையிலும் மாலையிலும் ஸலவாத் சொல்வதை எமது நாளாந்த பழக்கமாக ஆக்கிக் கொள்வோம்.

ஸதகா

நபி ﷺ கூறினார்கள்:
“ஒருவர் நேர்மையான வழியில் சம்பாதித்ததில் இருந்து ஒரு பேரீச்சம் அளவு தர்மம் செய்தால் அல்லாஹ் அதைத் தனது வலக் கரத்தால் ஏற்று அதன் உரிமையாளருக்காக அதை மலையளவு போல் ஆகிவிடும் வரை வளர்த்தெடுக்கிறான்.”

Leave A Comment