ஸலாமா வாராந்த நினைவூட்டல் 25

October 2, 2026
36 Views

முஹம்மது ﷺ அவர்களுக்கு நிகராக யார் இருக்க முடியும்?

அனைத்து மனிதர்களுக்காகவும் அனுப்பப்பட்ட அந்த மகத்தான தூதர் ஒளிரும் அனைத்து நற்பண்புகளின் சங்கமமாகவும் மனிதக் கற்பனைகள் உருவாக்கிய உயரிய இலட்சியங்களின் உருவமாகவும் இருந்தார்கள். பின்னர் அல்லாஹ் அந்த இலட்சியங்களை பூமியில் அமைதியாக நடமாடும் ஒரு மனித உருவாக வடிவமைத்தான்.
வரலாற்றில் சில தலைவர்கள் தமது அபாரமான திறமையாலும் மகத்துவத்தாலும் மக்களை ஈர்த்து அவர்களின் மரியாதையையும் அன்பையும் பெற்றுள்ளனர். அவர்கள் தமது காலத்திலும் வரலாற்றிலும் அழியாத தடத்தைப் பதித்துச் சென்றுள்ளனர்.
மனித குல வரலாற்றில் வீரர்களாலும் மகத்தானவர்களாலும் மதிக்கப்பட்டு மக்களின் இதயங்களில் ஆழமான அன்பைப் பெற்றவர் அண்ணல் நபி முஹம்மத் ﷺ அவர்களே.
வீரர்கள் அவர்களை நேசித்தனர். ஏனெனில் போரில் அவர்களை விட அதிக துணிச்சலும் அஞ்சாமையும் கொண்டவர்களாக இருந்தார்கள்.
அரசியல் மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் அவர்களை நேசித்தனர். ஏனெனில் அவர்கள் நெகிழ்வானவராகவும் அனைவராலும் எளிதில் அணுகக் கூடியவராகவும் விளங்கினார்கள்.
தாராளமான கொடையாளிகள் அவர்களைக் கண்டபோது ஒட்டகங்களும் ஆடுகளும் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கிற்கே அவர்கள் உரிமையாளராக இருந்தார்கள். ஆனால் அன்றைய சூரியன் மறையும் நேரத்திற்குள் அவற்றில் பெரும்பகுதி உதவி நாடி வந்தவர்களுக்கும் விரும்பி வந்தவர்களுக்கும் வழங்கப்பட்ட நன்கொடைகளாகவும் பரிசுகளாகவும் மாறியிருக்கும்.
அண்ணல் நபி முஹம்மத் ﷺ அவர்கள் தாராளம் வணக்கம் தூய்மை சொல்வன்மை துணிவு மற்றும் உயர்ந்த குணநலன்கள் அனைத்திலும் சிறந்து விளங்கினார்கள். அவர்களுடைய மகத்துவம் எவராலும் எட்ட முடியாத உயரத்தில் இருந்த போதிலும் அவர்கள் மிகவும் எளிமையானவராகவும் ஏழைகள் மற்றும் விதவைகள் உட்பட அனைவரும் எளிதில் அணுகக் கூடியவராகவும் இருந்தார்கள்.
அவர்களுடைய அன்பும் இரக்கமும் அனைவரையும் சமமாகச் சூழ்ந்திருந்ததால் அவர்களைச் சந்தித்த ஒவ்வொருவரும் தாமே அவர்களுக்கு மிகவும் பிரியமானவர் என்ற உணர்வைப் பெற்றனர். சூரியன் அனைவருக்கும் சமமாக ஒளியும் வெப்பமும் வழங்குவது போல நபி ﷺ அவர்கள் தமது தோழர்கள் அனைவரையும் அன்பு இரக்கம் மற்றும் அரவணைப்புடன் நடத்தினார்கள்.

அவர்கள்தான் முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் ﷺ அவர்கள்.
மகத்தான ஒருவரின் உண்மையான சிறப்பை அவரைப் போன்ற மகத்தானவர்களே முழுமையாக உணர முடியும். மக்களிடையே முஹம்மது ﷺ அவர்களுக்கு நிகரானவர் யார் தான் இருக்க முடியும்?

ஸதகா

நபி ﷺ கூறினார்கள்: “நிச்சயமாக சதகா அதைக் கொடுத்தவருக்கு கப்ரின் வெப்பத்தைத் தணிக்கும். மேலும் மறுமை நாளில் முஃமின் தனது சதகாவின் நிழலில் நிழல் பெறுவான்.”

Leave A Comment