எமக்கு எதிராக சாட்சி சொல்லும் பூமி
அல்லாஹ் ﷻ கூறுகிறான்: (يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا)
“அந்நாளில் அது (பூமி) தனது செய்திகள் அனைத்தையூம் அறிவிக்கும்.” (ஸூரத் அல்-ஸல்ஸலா: 4)
மனிதர்களின் செயல்களுக்கு சொல்லும் சாட்சிகளில் ஒன்றாக பூமியூம் உள்ளது. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் அடியானே! நீ நடந்து செல்லும் இந்த பூமியே நீ உலகத்தில் செய்த அனைத்தையூம் குறித்து உனக்கு எதிராக சாட்சி சொல்லும். அப்படியானால்இ அல்லாஹ்வின் விசாரணை மற்றும் தண்டனையில் இருந்து தப்பிப்பது எங்கே?
யா அல்லாஹ்! எங்களுக்கு பாதுகாப்பையூம் அமைதியையூம் தந்து அருள்புரிவாயாக.
அல்லாஹ்வை நான் எப்படி அடைவது?
அல்லாஹ்வை அடைந்தவர்களின் வாழ்க்கையை சிந்தித்துப் பார்க்கும் போது ஒன்று மட்டும் தௌpவாகப் புரிகிறது: அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு வாழ்ந்திருக்கின்றார்கள்.
• நூஹ் நபியிடம் கப்பல் செய்யூமாறு அல்லாஹ் ஏவிய போதுஇ அவர் உடனே பணியைத் தொடங்கினார். ‘என் இறைவா! பாலைவனத்தின் நடுவே இந்தக் கப்பல் என்ன செய்யூம்?’ என்று அவர் தர்க்கம் செய்யவில்லை.
• இப்ராஹீம் நபியிடம் மகனை அறுக்கும்படி அல்லாஹ் ஏவிய போதுஇ அவர் தயக்கமின்றி கட்டளையை நிறைவேற்ற முன்வந்தார். ‘ஒரு தந்தை தன் மகனைப் பலியிடுவதில் என்ன ஞானம் இருக்க முடியூம்?” என்று அவர் வினவவில்லை.
• மூஸா நபியின் தாயாரிடம்இ குழந்தையை ஆற்றில் எறியூம்படி அல்லாஹ் ஏவிய போதுஇ அவர் அப்படியே செய்தார். ‘இதை விடக் குறைந்த ஆபத்துள்ள வேறு வழி இல்லையா?” என்று அவர் பதறவில்லை.
• ஹாஜர் (அலை) அவர்களையூம் அவரது பாலகனையூம் பாலைவனத்தில்இ சில பேரீச்சம்பழத்துடனும் ஒரு தோல் பை தண்ணீருடனும் விட்டுவிட்டு இப்ராஹீம் நபி புறப்பட்டபோதுஇ அன்னை ஹாஜர் கேட்டது ஒரே ஒரு கேள்விதான்: ‘அல்லாஹ் உங்களுக்கு இதைக் கட்டளையிட்டானா?” அவர் ‘ஆம்” என்றதும்இ ஹாஜர் சொன்னார்: ‘அப்படியானால் செல்லுங்கள்இ அல்லாஹ் எங்களை ஒருபோதும் கைவிடமாட்டான்!”.
காலம் சுழன்றது… அற்புதங்கள் நிகழ்ந்தன:
அல்லாஹ் அந்தப் பெருவெள்ளத்தைக் கப்பலுக்காகவே வரவழைத்தான். அறுக்கப்படவிருந்த அந்தப் பாலகனுக்குப் பதிலாக ஒரு ஆட்டைப் பகரமாக அளித்தான். அந்த நதியை ஒரு தூதுவனாக மாற்றிஇ குழந்தையை ஃபிர்அவ்னிடமே கொண்டு சேர்த்தான் – அதே குழந்தையின் கையால்தான் ஃபிர்அவ்ன் அழிந்தான். வெறிச்சோடிய அந்தப் பாலைவனத்தை ‘மக்கா” எனும் புனித பூமியாக மாற்றினான் – கியாமத் நாள் வரை அதுவே முஃமின்களின் கிப்லாவாக மாறியது. எனவேஇ இறைவனை அடைய விரும்பினால்இ அவனது கட்டளைகளுக்கு கட்டுப்படு. அவனுக்குக் கீழ்ப்படி. அல்லாஹ் விரும்புவதற்கு நீ உன்னை ஒப்படைத்துவிடு.
இந்தோனேசியாவில் மஸ்ஜித்கள்
உலகில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடு இந்தோனேசியாவாகும். இங்கு தான் உலகில் அதிகமான மஸ்ஜித்கள் உள்ளன. சுமார் 800இ000 மஸ்ஜித்கள் அங்குள்ளன. இவற்றில் தலைநகர் ஜகார்தாவில் உள்ள ‘மஸ்ஜித் இஸ்திக்லால்’ மிகப் பெரிய பள்ளிவாசலாகும். இப்பள்ளிவாசல் சுமார் 120இ000 பேர் தொழும் அளவூ விசாலமானது. 7 மாடிகளைக் கொண்ட இந்த மஸ்ஜிதின் நிர்மானப் பணி நிறைவடைய 17 வருடங்கள் எடுத்தன.





