கடந்த 04/12/2018 ம் திகதி குவைத் ஜம்இய்யதுல் இஸ்லாஹ் அல்-இஜ்திமாஈ யின் முன்னால் தலைவர் அஷ்ஷெய்க் ஹமூத் ஹமத் அர்-ரூமி அவர்களை கௌரவிக்குமுகமாக இடம்பெற்ற நிகழ்வில் இலங்கையர்களை பிரதிநிதித்துவப்படுத்தி குவைத்தில் இயங்குகின்ற இக்ரஃ இஸ்லாமியச் சங்கமும் (IIC) இலங்கை ஸலாமா நிறுவனமும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக குவைத் மற்றும் ஏனைய நாட்டு முஸ்லிம்களுக்கும் பல நற்பணிகளைச் செய்து வருகின்ற ஜம்இய்யதுல் இஸ்லாஹ் அல்-இஜ்திமாஈ யின் முன்னால் தலைவர் அஷ்ஷெய்க் ஹமூத் ஹமத் அர்-ரூமி அவர்களை கௌரவிக்குமுகமாக குவைத் IIC நிறுவனம் மற்றும் ஸலாமா நிறுவனம் அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
இந்த விஜயத்தில் ஸலாமா சார்பாக அதன் தலைவர் ஷெய்க் ஆஷாத் அப்துல் முஈத் (நளீமி) மற்றும் ஷெய்க் முனாஸ் ரியால் (நளீமி) ஆகியோர் கலந்து கொண்டதுடன், ஜம்இய்யதுல் இஸ்லாஹ் அல்-இஜ்திமாஈ யின் புதிய தலைவர் அஷ்ஷெய்க் காலித் அல்-மத்கூர் உடனான அறிமுக சந்திப்பும் இடம்பெற்றது.






