சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

December 20, 2018
1,389 Views

கல்கமுவ ESHDA நிறுவனத்தின் கீழ் இயங்கும் குர்ஆன் மத்ரஸாவின் முதலாவது தொகுதி மாணவர்கள் வெளியேறுவதை முன்னிட்டும், கடந்த ரமழான் மாதம் OMSED Sri Lanka நிறுவனத்துடன் இணைந்து கல்கமுவ மற்றும் அதனைச் சூழவுள்ள ஊர்களிலுள்ள மாணவர்களை மையப்படுத்தி நடாத்திய Ramazan Vacation Course (RVC) நிகழ்ச்சியின் சான்றிதழ் வழங்கும் வைபவமும் கடந்த 13/12/2018 ம் திகதி கல்கமுவ பிரதேச சபை கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் (நளீமி) அவர்களும் கௌரவ அதிதியாக Mercy Educational Complex யின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் பௌஸுர் ரஹ்மான் (நளீமி) அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கல்கமுவ பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் மற்றும் ஏனைய பள்ளிவாசல்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆசிரிய ஆசிரியைகள், ஊர் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

   

Leave A Comment