பெண்களிலும் முரப்பியாக்கள் உருவாக்கப்படல் வேண்டும்

May 9, 2018
1,886 Views

மனித ஆளுமைகளை உருவாக்கும் பணி மகத்தானது. அதன் பிரதான பரப்பான “முரப்பீக்களின் தேவை”  இன்று சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றது. கற்ற  அறிவை நடைமுறையில் கொண்டு வருவதற்கான பயிற்சியை வழங்குவது முரப்பீக்களின் பிரதான பணியாகும். இப்படியான பணியை மேற்கொள்ள ஆண்கள் தயார்படுத்தப்பட வேண்டியதன் தேவை  இருப்பது போல் பெண்களிலும் முரப்பியாக்கள் உருவாக்கப்படல் வேண்டும்.

திஹாரிய ரிபாத் கலாசார நிலையத்தின் வழிகாட்டலுடன் குறீகொடுவ ஹாதியா இஸ்லாமிய  கல்வி நிலையத்தில் படித்து பட்டம் பெற்ற மாணவிகளையும், தெரிவு செய்யப்பட்ட கற்றுக் கொண்டிருக்கும் மாணவிகளையும் மையப்படுத்தி இடம்பெற்ற “முரப்பி” பயிற்சி நெறியின் இறுதி நிகழ்வு 04.05.2018 அன்று ஹாதியா இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜமாஅதுஸ் ஸலாமாவின் தலைவர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் கலந்து கொண்டார் . மேலும் இந்நிகழ்வில் றிபாத் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் இர்பான் அப்துல் கபூர்  (நளீமி )அவர்களும்,   ஹாதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தின் உப  அதிபர்  அஷ்ஷெய்ஹ் ஹஸன்  அப்துல் காதர் அவர்களும் இன்னும் பல  அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

    

Leave A Comment