“அழைப்புப் பாதையில் ஒரு பயணம்” நூல் வெளியீட்டு விழா

May 15, 2018
1,419 Views

“அழைப்புப் பாதையில் ஒரு பயணம்” என்ற நூல் வெளியீட்டு விழா 14-05-2018 ம் திகதி திஹாரிய மஸ்ஜிதுல் இப்றாஹிமிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இது ஈராக்கிய பேரறிஞர் உஸ்தாத் முஹம்மத் அஹ்மத் ராஷித் அவர்கள் எழுதிய ‘அல்-முன்தலக்’ எனும் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாகும். இதனை அஷ்ஷெய்க் மிஹ்ழார் எம். ரஷீத் (நளீமி) அவர்கள் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். புத்தகத்தை Focus Media நிறுவனம் வெளியிட்டது.

கூட்டு தஃவாவின் முக்கியத்துவம், அதற்கான ஷரீஅத் ஆதாரங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்த புத்தகம் தஃவா தொடர்பான முக்கியமான பல அம்சங்களை பேசுகின்றது. இவ்வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாக அல்குர்ஆன் திறந்த கல்லூரியின் பணிப்பாளர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர் (நளீமி) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், புத்தக அறிமுகத்தை சர்வதேசப் பார்வையின் பிரதம ஆசிரியர் அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் (நளீமி) அவர்கள் செய்தார்கள்.

நிகழ்ச்சிக்கு ஜமாஅதுஸ் ஸலாமாவின் தலைவர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் (நளீமி) அவர்கள் தலைமை தாங்கியதோடு, ஏற்புரையை அஷ்ஷெய்க் மிஹ்ழார் எம். ரஷீத் அவர்கள் நிகழ்த்தினார்.

         

Leave A Comment