வெள்ள நிவாரண உதவி

February 24, 2018
1,337 Views

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அதிகமான பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக தென் மாகாணம் அதிகளவிலான சேத்திற்குள்ளாது. இதனால் அம்மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மக்களின் துயர் துடைக்க ஜமாஅதுஸ் ஸலாமாவின் அங்கத்தவர்கள் மற்றும் ஊழியர்களினால் பல்வேறு மனிதாபிமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஓர் அங்கமாக கடந்த 31.05.2017 புதன் கிழமை பாதிக்கப்பட்ட போருவை – கொடப்பிட்டிய பிரதேசத்திற்கு ஜமாஅதுஸ் ஸலாமாவின் தலைமைபீடம் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அங்கு அம்மக்களின் நிலவரங்களைப் பார்வையிட்டதோடு உதவிப்பணிக்காக அங்கு சென்றுள்ள ஸலாமாவின் அங்கத்தவர்களை ஊக்கமூட்டும் வகையில் சில கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. மற்றும் அப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடனும் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதோடு அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது இஸ்லாமிக் ரிலீப் மற்றும் MFCD நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட நிவாரண உதவிகளின் போது ஸலாமாவின் தலைமைபீடமும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தில் ஜமாஅதுஸ் ஸலாமாவின் தலைவர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத், பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் றயீஸுல் இஸ்லாம், பொருளாளர் Dr. ஸைபுல் இஸ்லாம், முன்னால் தலைவர் உஸ்தாத் நியாஸ் முஹீதீன் மற்றும் ஜமாஅத்தின் மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அத்தோடு ஸலாமாவின் பெண்கள் பிரிவினரும் இவ் விஜயத்தில் கலந்து கொண்டு அம்மக்களின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

Leave A Comment