தேசிய சூறா சபையின் 100வது நிறைவேற்றுக் குழுக் கூட்டமும் இப்தார் நிகழ்வும்

June 4, 2018
1,236 Views

தனது 100வது நிறைவேற்றுக் குழு கூட்டத்தை நடாத்தும் தேசிய சூறா சபையினருக்கு ஜமாஅதுஸ் ஸலாமா தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தேசிய சூறா சபையின் 100வது நிறைவேற்றுக் குழுக் கூட்டமும் இப்தார் நிகழ்வும் 29.05.2018ம் திகதி AMYS அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேசிய சூறா சபையின் அங்கத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வில் ஜமாஅதுஸ் ஸலாமா சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஷெய்க் ரயீஸுல் இஸ்லாம், தஃவாப் பிரிவுப் பொறுப்பாளர் ஷெய்க் ரம்ஸான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தேசிய சூறா சபை உருவாக்கப்பட்டது தொட்டு இதுவரை முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்பான ஒரு சுருக்க அறிமுகம் முன்வைக்கப்பட்டதுடன், அங்கத்துவ நிறுவனங்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல சவால்களுக்கும் மத்தியில் தேசிய சூறா சபையை தனது 100வது நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வரை கட்டியெழுப்பி பலப்படுத்தி உரமூட்டிய அதன் தலைவர், தற்போதைய மற்றும் முன்னாள் செயலாளர்கள், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் செயலக உறுப்பினர்கள் அனைவருக்கும் ஜமாஅதுஸ் ஸலாமா நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

  

Leave A Comment