சியல்கோட்டில் நடைபெற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்

December 6, 2021
759 Views

பாகிஸ்தான் சியால்கோட்டில் இடம்பெற்ற மனிதப்படுகொலை எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாத மிலேச்சத்தனமான செயலாகும். அங்கு கடமையாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார கொடூரமாக கொலை செய்யப்பட்டமையானது மனித நேயம் இல்லாத தீவிரவாதத்தின் வெளிப்பாடாக அமைகின்றது.

இத்தகைய செயற்பாடுகளை எவர் செய்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும். மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்கப்படும் இவ்வகையான செயற்பாடுகளால் இன்று மார்க்கம் கொச்சைப்படுத்தப்படுகின்றது. அதன் தூய தன்மையில் கலங்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று உலகில் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்து வருகின்ற இத்தகைய தீவிரவாத செயற்பாடுகளால் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. மக்கள் அச்சத்துடனும், பீதியுடனும் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உலகில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த அயராது உழைக்க வேண்டிய இக்காலத்தில் இத்தகைய மிலேச்சத்தனமாக செயல்களை மேற்கொள்வோரும், இதற்குப் பின்னால் உள்ள ஆதிக்க சக்திகளும் மனித சமூகத்திற்கும், மனித நேயத்திற்கும் எதிரான செயற்பாடுகளையே செய்து வருகின்றனர்.

இந்த கொடூரமான செயலை ஸலாமா சொஸைடி வன்மையாகக் கண்டிப்பதுடன், கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

இப்படிக்கு

ஸலாமா சொஸைடி

கொழும்பு

6-12-2021

Leave A Comment