ஒன்றுகூடல் நிகழ்வும் களப் பயணமும்

July 26, 2018
1,225 Views

கொழும்பு Salamah HQ இல் நடைபெறுகின்ற தப்ஸீர் வகுப்பை மையமாகக் கொண்டு, சமூக ஆர்வலர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வு மற்றும் களப் பயணம் கடந்த 22-07-2018ம் திகதி முழுநாள் நிகழ்வாக நடைபெற்றது. இதன்போது புத்தளம் மதுரங்குளி Mercy Education Complex மற்றும் கற்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அப்பிரதேசங்களில் சமூக நலப் பணிகளில் ஈடுபாடு காட்டுகின்ற சகோதரர்களை சந்தித்ததுடன், அவர்களுடனான அனுபவ பகிர்வும் இடம்பெற்றது. இதன்போது ஸலாமாவின் செயற்பாடுகள் தொடர்பான அறிமுகமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக உளவளத்துணை ஆலோசகர் மனூஸ் அபூபக்கர் மற்றும் பயிற்றுவிப்பாளர் இஸ்பஹான் சர்ப்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Comment