ஸலாமா வாராந்த நினைவூட்டல் 28

October 23, 2026
7 Views

கருத்து வேறுபாடுகளும் சமூக ஒற்றுமையும்

அறிஞர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் உண்மையைத் தேடும் தூய்மையான நோக்கத்துடன் இருந்தால் அவை நீண்டகாலப் பிளவுகளுக்கு வழிவகுக்காது. ஆனால் தனிப்பட்ட விருப்பங்கள் மனோ இச்சைகள் மற்றும் சுயநல நோக்கங்கள் மேலோங்கும் போது அவை சமூகத்தில் பிரிவினைகளை உருவாக்குகின்றன.
நபியவர்களின் பாசறையில் வளர்ந்த ஸஹாபாக்கள் கருத்து வேறுபாடுபட்டார்கள். பின்னால் வந்த தாபிஈன்கள் இமாம்களுக்கு மத்தியிலும் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. ஆனால் அவர்களின் உள்ளங்கள் தூய்மையானதாகக் காணப்பட்டன. ஒருவர் மற்றவரின் கருத்தை நியாயம் கண்டார்கள். விட்டுக் கொடுத்தார்கள்.
அறிவின் விசாலம் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது. நல்லெண்ணம் பொறுமையை ஏற்படுத்துகிறது. உண்மையான ஈமான் உம்மத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்கிறது. எனவே பிரிவினைக்கு வழிவகுக்கும் கருத்துக்களையும் அணுகுமுறைகளையும் நாம் தவிர்க்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
‘தமது மார்க்கத்தில் பிரிவினையை ஏற்படுத்தி பல பிரிவுகளாகப் பிரிந்தவர்களுடன் உமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களின் விவகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.” (அல்-அன்ஆம்: 159)
எனவேஇ நமது நோக்கத்தைத் தூய்மைப்படுத்தி உண்மையைத் தேடுவதிலும் கருத்து வேறுபாடுகளைக் கண்ணியத்துடன் அணுகுவதிலும் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையைப் பாதுகாப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

முஸ்லிம் சமூகம் ஒரு கட்டிடத்தைப் போன்றவர்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்-அஷ்அரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்கு ஒரு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைப் பலப்படுத்துகிறது.” என்று கூறிய நபி (ஸல்) அவர்கள்இ தமது விரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காட்டினார்கள். (ஆதாரம்: புஹாரி)
இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதில் பல சிந்தனைகள் தோன்றுவது இயல்பானது. இதுவே வரலாறு. இதனை அறிஞர்கள் அருளாகப் பார்த்தார்கள். இவை இஸ்லாத்தின் பரந்த தன்மையாகும்.
எனவே எம்மை இணைக்கும் பாலமாக ஈமான் இருக்க வேண்டும். மாற்று சிந்தனை உள்ள ஒரு ஈமானிய சகோதரனுக்கு ஏற்படும் துன்பம் எமக்கும் வலியை ஏற்படுத்த வேண்டும். அவனுக்கு ஏற்படும் நலவு எம்மை மகிழ்விக்க வேண்டும்.

ஸதகா

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத மறுமை நாளில் அல்லாஹ் தனது (அர்ஷின்) நிழலில் ஏழு நபர்களுக்கு நிழல் அளிப்பான். அவர்களில் ஒருவர் வலது கை கொடுப்பதை இடது கை அறியாதவாறு மிக ரகசியமாக தர்மம் செய்த மனிதர் ஆவார்.”

Leave A Comment