“பசுமை நிறைந்த சுத்தமான சூழல்” சாய்ந்தமருது ஸலாமா தின நிகழ்வு

May 2, 2018
1,314 Views

2018ம் வருடத்திற்கான சாய்ந்தமருது பிரதேச ஸலாமா தின நிகழ்வு கடந்த 30-04-2018ம் திகதி சாய்ந்தமருது பேர்ள்ஸ் மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் ‘பசுமை நிறைந்த சுத்தமான சூழல்’ எனும் மகுடத்தின் கீழ் ஆரம்பமானது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். ஸலீம் அவர்கள் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், அட்டாளைச்சேனை MOH Dr. ஏ.எல். அலாவுதீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பிரதம அதிதி தனது உரையில் மர நடுகையின் முக்கியத்துவம் சம்பந்தமாக தெளிவுபடுத்தினார். அத்துடன் வருகை தந்த அதிதிகள் பலரும் ஸலாமாவின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக புகழ்ந்து பேசினார்கள். மேலும் இந்நிகழ்வில் இவ்வருடம் SLEAS துறைக்கு தெரிவானோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வை சாய்ந்தமருது Centre for Social Development (CSD) நிறுவனம் ஒழுங்குபடுத்தி நடாத்தியது.

         

Leave A Comment