ஸலாமா வாராந்த நினைவூட்டல் 22

September 10, 2026
21 Views

உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்கு ஹஸன் அல்-பஸ்ரி (ரஹ்) எழுதிய பதில்:

கலீஃபா உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஹஸன் அல்-பஸ்ரி (ரஹ்) அவர்களிடம் ‘இம்மை மற்றும் மறுமை வாழ்க்கையின் நிலையை சுருக்கமாக எனக்கு விளக்குங்கள்” என்று கேட்டார்கள்.
அதற்கு ஹஸன் அல்-பஸ்ரி (ரஹ்) அவர்கள் எழுதினார்கள்:
‘இம்மை வாழ்க்கை ஒரு கனவு போன்றது மறுமை விழிப்புணர்வு போன்றது மரணம் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலையாகும். நாம் குழப்பமான கனவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தன்னைத் தானே விசாரித்துக் கொள்பவன் வெற்றி பெறுகிறான். தன்னைக் குறித்து அலட்சியமாக இருப்பவன் நஷ்டமடைகிறான்.
விளைவுகளைச் சிந்திப்பவன் காப்பாற்றப்படுகிறான்;. தனது மன இச்சையைப் பின்பற்றுபவன் வழி தவறுகிறான்;.
பொறுமையுடனும் நிதானத்துடனும் இருப்பவன் பலன் பெறுகிறான்.
அல்லாஹ்வை அஞ்சுபவன் பாதுகாப்புப் பெறுகிறான்;.
படிப்பினை பெறுபவன் உண்மையைப் பார்க்கிறான்;. உண்மையைப் பார்ப்பவன் புரிந்துகொள்கிறான்;.
புரிந்துகொள்பவன் அறிவைப் பெறுகிறான்;. அறிவைப் பெற்றவன் அதன்படி செயல்படுகிறான்.
எனவே நீ தவறிவிட்டால் உடனே திரும்பிவிடு.
நீ வருந்தினால் அந்தத் தவறை விட்டுவிடு.
உனக்குத் தெரியாவிட்டால் கேட்டு அறிந்துகொள்.
கோபம் வந்தால் உன்னைக் கட்டுப்படுத்திக் கொள்.”

உறுப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தினால்..

வாழ்வாதாரம் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்று அதிகமாக இஸ்திக்ஃபார் (பாவமன்னிப்புத் தேடுதல்) செய்வதாகும்.
அதேபோன்று மதிப்புடன் கூடிய கண்ணியத்தைப் பெறுவதற்கான காரணங்களில் ஒன்று குறைவாகப் பேசுவதாகும்.
மேலும் அழகை பெறுவதற்கான காரணங்களில் ஒன்று அதிகமாகப் புன்னகைப்பதாகும்.
எனவே ஒவ்வொரு நாளும் தாராளமானவனாகவும் அழகானவனாகவும் மதிப்புடன் கூடிய கண்ணியமானவனாகவும் இருந்து கொள்.
சிந்தித்துப் பார்:
இவை அனைத்தும் உனது ஒரு உறுப்பை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் உனக்குக் கிடைக்கின்றன.
அதுவே உனது வாயாகும்.
அப்படியிருக்க உடலில் உள்ள ஒவ்வொரு அருட்கொடையையும் சிறந்த முறையில் பயன்படுத்துகின்றவன் எப்படி இருப்பான்?

(கலாநிதி அஹ்மத் ஈஸா அல்-மஃஸராவி)

ஸதகா

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத மறுமை நாளில் அல்லாஹ் தனது (அர்ஷின்) நிழலில் ஏழு நபர்களுக்கு நிழல் அளிப்பான். அவர்களில் ஒருவர் வலது கை கொடுப்பதை இடது கை அறியாதவாறு மிக ரகசியமாக தர்மம் செய்த மனிதர் ஆவார்.”

Leave A Comment