ஸலாமா வாராந்த நினைவூட்டல் 21

September 3, 2026
67 Views

பலவீனர்களின் மீது கருணை காட்டுங்கள்.

பலவீனர்கள் அநாதைகள் விதவைகள் ஏழைகள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுவர்களிடம் மென்மையுடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்ளுங்கள். இது இதயத்தில் கருணை மென்மை பாசத்தை உண்டாக்கும். மற்றும் அல்லாஹ்வை நோக்கி எமது உள்ளங்களைத் திருப்பிவிடும்.
இதனை நடைமுறையில் அனுபவித்தவர்களே அதன் இனிமையை உணர முடியும்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் தனது அடியார்களில் இரக்கம் காட்டுபவர்களுக்கே இரக்கம் காட்டுகிறான்.”

 

பாதுகாக்கப்பட்ட தூய உள்ளம்

மனிதன் தன்னைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடாது. தனது நம்பிக்கையைக் குறித்தும் தற்பெருமை கொள்ளக் கூடாது. மாறாக எப்போதும் அல்லாஹ்விடம் தனது ஈமானில் நிலைத்திருக்கச் செய்யுமாறு வேண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஏனெனில் மனிதனுடைய உள்ளத்தை சந்தேகங்களும் ஆசைகளும் பாதிக்கக்கூடும். சில வேளைகளில் ஒருவர் உண்மையான நம்பிக்கையாளராக இருக்கலாம். பின்னர் ஷைத்தான் அவரது உள்ளத்தில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்திவிடுவான். அப்போது அவர் (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!) உண்மையைப் பார்க்க முடியாமல் வழிதவறிச் செல்லக்கூடும்.
அதேபோன்று சில வேளைகளில் ஒருவர் நல்லவராகவும் அல்லாஹ்வின் கட்டளைகளில் உண்மையாக நிலைத்திருப்பவராகவும் இருக்கலாம். அப்போது ஷைத்தான் அவரது உள்ளத்தில் தீய ஆசையை ஏற்படுத்திவிடுவான். அதன் விளைவாக அவர் வழிதவறி ஆசைகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுகிறார்.
எனவே தூய்மையான உள்ளம் (قلب سليم) என்பது சந்தேகங்களிலிருந்தும் தீய ஆசைகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட உள்ளமாகும்.

 

ஸதகா

சதகாக்கள் அல்லாஹ்வின் அன்பு – திருப்தி மறுமையில் நிழல் நரக விடுதலை நோய் நிவாரணம் செல்வத்தில் பரகத் மற்றும் பல நன்மைகளைப் பெற்றுத்தர போதுமானதாகும்.

Leave A Comment