நீதியாக நடப்பது இஸ்லாத்தின் உன்னத நோக்கங்களில் ஒன்று
ஒருவர் தீயவராக இருந்தாலும் இறைமறுப்பாளராக இருந்தாலும் அவரிடத்திலும் நீதியுடன் நடந்துகொள்ளுமாறு இஸ்லாம் பணிக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும். அவர் தீயவராக இருந்தாலும் சரியே. ஏனெனில் அவரது தீமையின் விளைவு அவரையே சாரும்.” (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்).
இந்த ஹதீஸ் நீதி ஏகத்துவம் மற்றும் நற்பண்புகள் ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில் ஒன்றிணைத்துக் காட்டுகிறது. இஸ்லாமிய ஒழுக்கநெறிகள் என்பது
• நிலையானது: மனிதர்கள் மாறுவதால் நமது ஒழுக்கநெறிகள் மாறக்கூடாது.
• அனைவருடனும் நீதி: ஒரு முஸ்லிம் தான் விரும்புபவரிடத்திலும் வெறுப்பவரிடத்திலும் நீதியுடன் நடந்துகொள்ள வேண்டும். எதிராளிக்கு ஏற்ப தனது நடத்தையை மாற்றிக்கொள்ளக்கூடாது.
• பழிவாங்கும் மனப்பான்மையிலிருந்து விடுதலை: எதிரியிடத்திலும் நீதியுடன் நடந்துகொள்ளப் பழகுபவர் தனது கோபத்தைக் கட்டுப்படுத்தி தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பதிலாக மற்றொரு அநீதியைச் செய்வதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறார்.
• அநீதியைப் பற்றிய ஆழமான அச்சம்: அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை அவர் தீயவராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை ஒருவர் அறிந்தால் அவர் அநீதி செய்வதற்கு அஞ்சுவார்; தனது நடத்தையையும் தொடர்ந்து சுயபரிசோதனை செய்வார்.
• அகீதாவையும் நடத்தையையும் இணைத்தல்: இஸ்லாத்தின் பார்வையில் ஈமான் என்பது வெறும் முழக்கங்களோ வார்த்தைகளோ அல்ல. அது பிறருடன் நாம் நடந்துகொள்ளும் விதத்தில் வெளிப்பட வேண்டும்.
நடைமுறைப் படிப்பினைகள்
• நீதித்துறை மற்றும் பிணக்குகள்: எதிர்த்தரப்பினரின் மதத்தையோ அவர்களுடைய தனிப்பட்ட நடத்தையையோ கருத்தில் கொள்ளாமல் உண்மைக்கும் நீதிக்கும் ஏற்ப தீர்ப்பளிக்க வேண்டும்.
• அன்றாடப் பரிவர்த்தனைகள்: மற்றவர் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் நல்லவராக இருந்தாலும் நல்லொழுக்கமற்றவராக இருந்தாலும் அனைவருடனும் உரிமைகளையும் ஒப்பந்தங்களையும் முறையாக நிறைவேற்ற வேண்டும்.
• குடும்பம்: கருத்து வேறுபாடு அல்லது சந்தேகத்தின் காரணமாக கணவர்இ மனைவி பிள்ளை பணியாளர் அல்லது அண்டை வீட்டார் எவருக்கும் அநீதி இழைக்கக்கூடாது.
• சமூகம்: ஒவ்வொரு மனிதரினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் போது தான் சமூகப் பாதுகாப்பும் அமைதியும் உறுதிப்படுத்தப்படும். இவ்வாறான நீதியும் நற்பண்புகளுமே ஒரு சமூகமும் தேசமும் நிலைத்து நிற்பதற்கான அடித்தளங்களாகும்.
ஸதகா
நபி ﷺ கூறினார்கள்: “நிச்சயமாக சதகா அதைக் கொடுத்தவருக்கு கப்ரின் வெப்பத்தைத் தணிக்கும். மேலும் மறுமை நாளில் முஃமின் தனது சதகாவின் நிழலில் நிழல் பெறுவான்.”





